பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அருள்மிகு பட்டீசுவரசுவாமி, இறைவி அருள்மிகு பச்சைநாயகியார் இறைவன் தன்னை வேண்டி தவம்புரிந்த காமதேனுவிற்கு காட்சியளித்து அதன் விருப்பத்தை நிறைவேற்றி முக்தி அளித்ததால் பிறவா நெறித்தலம் என்ற பெயர் பெற்றது. திருப்பேரூர் கொங்குநாட்டு வைப்புத் தலங்களுள்ளே பிரசித்தி பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இது பண்டைக்காலத்தில் அரசவனமாக இருந்தது. இவ்வனத்தில் பெருமானார் புற்றுக்களால் சூழப்பெற்றிருந்தார். படைப்பு தொழிலைச் செய்யும் ஆற்றலைப் பெறவிழைந்த காமதேனு இங்கு பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தது. ஒரு நாள் தனது கன்றின் கால் புற்றின் உள்ளே அகப்பட்டுக் கொள்ள, அதை எடுப்பதற்காக தன் கொம்புகளால் புற்றைக் குத்தி களைந்தெடுத்த போது கன்றின் கால் சுவடும், தனது கொம்பின் சுவடும் லிங்க ரூபமாக இருந்த இறைவனின்...
06:00 AM IST - 01:00 PM IST | |
04:00 PM IST - 09:00 PM IST | |
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். மார்கழி மாதம் அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும். |